• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுகவும் கூட்டணி கட்சிகளும் முஸ்லிம் மத வெறியை தூண்டுகிறார்கள் – சிபி.ராதாகிருஷ்ணன்

December 20, 2019

திமுகவும் கூட்டணி கட்சிகளும் முஸ்லிம் மத வெறியை தூண்டுகிறார்கள் என பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

குடியுரிமை சட்டதிருத்தம் என்பது தேசத்தைக் காக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வந்த சட்டம். இந்த தேசம் என்பது ஒரு சத்திரம் போல,யார் வேண்டுமானாலும் குடியேறலாம்,யார் வேண்டுமானாலும் கலவரத்தைக் உண்டு பண்ணலாம் என்ற நிலையைக் மாற்றி தேச நலனில் அக்கறை கொண்டு இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்க்கு எந்த பாதிப்பையும் இது ஏற்படுத்தவில்லை.ஆனால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தில் ஸ்டாலின் ,திருமாவளவன்,வைகோ போன்றவர்கள் பங்களாதேஷிலிருந்து வரும் மக்களைக் பாதுக்காக வேண்டும் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. எல்லை பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலைக் இந்த சட்டம் தடுக்கிறது. திமுக தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும் என உழைக்கிறார்கள். திமுகவும் கூட்டணி கட்சிகளும் முஸ்லிம் மத வெறியை தூண்டுகிறார்கள்.

இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக பிரதமர் ஒருவார்த்தை கூட பேச வில்லை. இஸ்லாமிய தீவிரவாதிகளை தூண்டும் விதமாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முயல்கிறது. மக்கள் தெளிவாக உள்ளனர். கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற இவர்களின் இருமாப்பு கலைந்து போகும். மக்கள் ஒன்று திரட்டிய ஜல்லிகட்டு போராட்டத்தைக்,ஏதோ இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகள் தான் கொண்டு சேர்த்தார்கள் என்ற அவர்கள் உருவக படுத்தியதைபோல் தற்போதும் அதேபோல் முயல்கிறார்கள்..இதில் அவர்கள் நிச்சயம் தோல்வி அடைவர்கள்.இங்குள்ள இலங்கை தமிழர்கள் ஈழத்தில் குடியேறினால் மட்டுமே அங்குள்ள தமிழர்களுக்கு உரிமைகளை நிலைநாட்டுவதற்க்கும் ,பாதுக்காப்பதற்கும் உதவும். அப்படி தமிழர்கள் அதைக் மீறி வந்தால், நமது அரசு அதைக் கனிவுடன் பரீசிலிக்கும் என்றார்.

மேலும் படிக்க