• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் போலீசாருக்கு அபராதம் விதிப்பதற்கு ஏதுவாக இ- சலான் கருவிகள் வழங்கல்

December 19, 2019

கோவை புறநகர் பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார் உரிய ஆவணங்கள் இன்றி வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்கள் மற்றும் லைசென்ஸ், இன்சூரன்ஸ் போன்றவை இல்லாத பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதில் பெரும் சிரமம் உள்ளது. இந்த நிலையில் புறநகர் பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசாருக்கு அபராதம் விதிப்பதற்கு ஏதுவாக இ- சலான் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் புறநகர் பகுதிகளை சேர்ந்த மொத்தம் 112 போலீசாருக்கு இ சலான் கருவிகள் வழங்கப்பட்டது.

இதில் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் மற்றும் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கருவிகளை வழங்கினர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.ஐ.ஜி. பேசுகையில்,

குடியுரிமை திருத்த சட்ட மசோதா தொடர்பாக போராட்டங்கள் நடைபெறுவதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்திய கருவிகள் மூலம் மொத்தம் 66 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் ஜனவரி முதல் போக்குவரத்து விதிமீறல்கள் ஈடுபடுவர்கள் தீவிரமாக கண்காணிக்க முடியும். மேலும் இந்த கருவி மூலம் வழங்கப்படும் தகவல்களை வைத்து ஆன்லைனிலும் அபராத தொகையை செலுத்தி கொள்ளலாம் என்றார்.

மேலும் கோவை புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுகள் மற்றும் 3 நம்பர் லாட்டரிகள் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் முற்றிலும் ஒழிக்கப்படும். தற்போது கோவை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க