• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டங்கள் மக்களுக்குப் பயன்படவில்லையென்றால் அது மாற்றப்பட வேண்டும் – கமல்ஹாசன்

December 18, 2019

இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீதான போலீசாரின் தடியடியை கண்டித்தும் மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டாவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்கலைக்கழக நிர்வாகம் விடுமுறை அறிவித்திருந்த போதிலும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். பல்கலைக்கழகத்திற்குள் கமல்ஹாசனை அனுமதிக்காத நிலையில், பல்கலைக்கழக முகப்பு நுழைவு வாயில் கேட்டின் வெளியே நின்று மாணவர்களை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்,

சர்வாதிகாரத்தை நோக்கி நாடு போய்க்கொண்டிருக்கிறது.மாணவர்களின் விடுதிகள் சமையல் அறைகளை அரசு இழுத்து மூடிவிட்டனர் போராடும் மாணவர்களை அகதிகளாக்கி இருக்கிறது அரசு.திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும். சட்டங்கள் மக்களுக்கு பயன்படவில்லை எனில் அவை மாற்றப்பட வேண்டும். ஆட்சியாளர்களின் கையில் நேர்மை என்பது இல்லை; என் கையில் இருக்கிறது.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

மேலும் படிக்க