• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் அஜித் வீட்டில் வனத்துறை திடீர் சோதனை

December 18, 2019 தண்டோரா குழு

சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் அஜீத்தின் உதவியாளர் சுரேஷ் சந்திரா சென்னை மதுரவாயலில் உள்ள தன் வீட்டில் மூன்று அடி நீளமுள்ள மலைப்பாம்பை வளர்ப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அஜித்தின் உதவியாளர் சுரேஷ் சந்திரா வீட்டில் வனத்துறையினர் சோதனை நடத்தினார்கள் ஆனால் அங்கு எதுவும் தென்படவில்லை. பின்பு நடிகர் அஜித்குமாரின் பழைய வீடான திருவான்மியூர் பகுதியில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அஜித்குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரன் இந்த சம்பவத்திற்கும் நடிகர் அஜித்குமாருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தகவல்கள் தெரிவித்துள்ளார்.இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க