• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

December 18, 2019

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. பல்வேறு கட்சியினர், அமைப்பை சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் தமிழகத்திலும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று காலை கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது அவர்கள் கூறுகையில்,

குடியுரிமை சட்டத் திருத்தம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே இந்த சட்டத் திருத்தத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் எங்களுடைய போராட்டம் தொடரும்”. என்றனர்.

மேலும் படிக்க