• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் ஆஸி., அணி அறிவிப்பு

December 17, 2019 தண்டோரா குழு

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 14 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

2௦2௦ ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலியா அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 14 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.இந்த அணியில் பல பெரிய மாற்றங்கள் இடம்பெற்றள்ளன. ஆஸ்திரேலியா அணி தனது கடைசி ஒருநாள் போட்டியினை உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது. இங்கிலாந்தில் இடம்பெற்ற இந்த உலகக் கோப்பை அணியில் இருந்து தற்போது குறிப்பிடத்தக்க 7 மாற்றங்கள் செய்யப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறது.

இந்த மாற்றத்தில் குறிப்பிடும் வகையில்., புகழ்பெற்ற வீரர்களான க்ளென் மேக்ஸ்வெல், நாதன் லியோன், ஒஸ்மான் குவாஜா மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. அதே நேரத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டக்காரராக தென்படும் மார்னஸ் லாபூஷனுக்கு 14 பேர் கொண்ட அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதைபோல் ஜோஷ் ஹேசில்வுட் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் துணைத் தலைவர்களாக அலெக்ஸ் கேரி மற்றும் பாட் கம்மின்ஸ் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆடம் ஜம்பா மற்றும் ஆஷ்டன் அகர் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரும் இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் அணியுடன் இருக்க மாட்டார். இந்த ஒருநாள் தொடருக்கு, ஆஸ்திரேலிய அணி ஆண்ட்ரூ மெக்டொனால்டை தலைமை பயிற்சியாளராக அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா ஒருநாள் அணி:

ஆரோன் பிஞ்ச், சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஜோஷ் ஹேசில்வுட், மார்னஸ் லாபுசாக்னே, கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் டர்னர், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா

மேலும் படிக்க