• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தடை செய்யப்பட்ட 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

December 17, 2019

கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் புகையிலை, பான், குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தடை செய்யப்பட்டு கடைகளில் விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதனடிப்படையில் கோவையில் இன்று மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் சூலூர் பகுதியில் 50 கிலோ புகையிலை பொருட்களும், சிங்காநல்லூர் பகுதியில் 20 கிலோ புகையிலை பொருட்களும், கவுண்டம்பாளையம் பகுதியில் 30 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாயாகும்.

மேலும் படிக்க