• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளைத்தில் துவங்கியது 12 வது யானைகள் சிறப்பு புத்துணர்வு நலவாழ்வு முகாம்

December 16, 2019

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கான 12 வது சிறப்பு நலவாழ்வு புத்துணர்வு முகாம் மேட்டுப்பாளையத்தில் துவங்கியது.

இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த 28 யானைகள் கலந்து கொண்டது.கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் தமிழக கோவில் மற்றும் திரு மடங்களைச் சேர்ந்த யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் முதலாவது முகாம் துவங்கப்பட்ட நிலையில் மலைப்பாதை போக்குவரத்தும் மலைப்பகுதியில் நிலவும் தட்பவெட்ப நிலையை காரணமாக யானைகள் சிரமப்படும் என்ற காரணத்தினாலும் இந்த முகமானது கடந்த 2012 ஆம் ஆண்டுமுதல் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமத்தில் பவானி ஆற்றின் படுகையில் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு 12 வது புத்துணர்வு முகாம் நேற்று துவங்கி 48 நாட்கள் நடைபெற உள்ளது.இதில் கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த 28 யானைகள் கலந்து கொண்டு உள்ளது.முகாமை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ரீப்பன் வெட்டி யானைகளுக்கு பழங்கள் கொடுத்து துவக்கி வைத்தார். யானைகளுக்கு 48 நாட்கள் முழு ஓய்வு உணவாக பசுந்தீவனங்கள் பாசிப்பயிறு கொள்ளு அரிசி போன்ற தானியங்களில் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட உள்ளது. தினமும் நடைபயிற்சி ஷவர் குளியல் மற்றும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் யானைகளுக்கு மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க