• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சாதுர்யமாக பேருந்தை நிறுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் – பெரும் விபத்து தவிர்ப்பு

December 16, 2019

கோவை குனியமுத்தூர் அருகே உடல் நலக்குறைவால் அரசு பேருந்தை நிறுத்திய ஓட்டுநரிடம், மது போதை என எண்ணி பயணிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை உக்கடத்திலிருந்து வாளையார் வரை செல்லும் 96 அரசு பேருந்து நேற்று இரவு 8.30 மணியளவில் உக்கடத்தில் இருந்து கிளம்பியது. அப்போது பேருந்தை பாலசுப்பிரமணி (43) என்பவர் ஓட்டி வந்தார். பேருந்து குனியமுத்தூர் அருகே வரும் போது ஓட்டுநருக்கு திடிரென உடல் நல குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதை உணர்ந்த ஓட்டுநர் பாலசுப்பிரமணி பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு பயணிகளை இறங்க கூறியுள்ளார். ஆனால் பாலசுப்பிரமணியின் நடவடிக்கைகளை கண்ட பயணிகள் அவர் மது போதையில் இருப்பதாக எண்ணி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பொதுமக்களும் அதிகளவு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த குனியமுத்தூர் போலீஸார் பாலசுப்பிரமணியை சோதனை செய்தனர். அப்போது ஓட்டுநர் மது அருந்தவில்லை என்பதும், குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டால் மயக்கமடையும் நிலையில் இருப்பதும் தெரியவந்தது. அதன் பின் அவ்வழியாக வந்த சக அரசு பேருந்து ஓட்டுநர்கள் பாலசுப்பிரமணியத்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். உடல் நலக்குறைவு ஏற்பட்டவுடன் பேருந்தை இயக்காமல் சாதுர்யமாக பேருந்தை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநருக்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் படிக்க