• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புத்துணர்வு முகாமுக்கு குதுகலத்துடன் கிளம்பியது கோவை பேரூர் பட்டீஸ்வரர் கல்யாணி யானை

December 14, 2019 தண்டோரா குழு

புத்துணர்வு முகாமுக்கு கோவை பேரூர் பட்டீஸ்வரர் கல்யாணி யானை குதுகலத்துடன் கிளம்பியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளைம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில், யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நாளை முதல் துவங்குகிறது. 12 ஆண்டாக தொடரும் இம்முகாமுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள யானைகள் வந்த வண்ணம் உள்ளன. அதன் ஒரு பகுதியாக, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள கல்யாணி யானையும், புத்துணர்வு முகாமிற்காக, பேரூர் கோவில் வளாகத்தில் இருந்து தற்போது கிளம்பியது.

யானையை கோவில் அர்ச்சகர்கள் பூஜை செய்து, சகல மரியாதைகளையும் செலுத்தி, வழி அனுப்பி வைத்தனர்.இதில் பக்தர்கள்
மற்றும் திருக்கோயில் பனியாளர்கள் ஓதுவார்கள் என பலர் கலந்து கொண்டு வழியனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க