• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் இதுவரை தேர்தல் பதவிகளுக்கான ஏலம், குழுக்கள் முறை என்ற குற்றச்சாட்டு வரவில்லை – மாவட்ட ஆட்சியர்

December 14, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் இதுவரை தேர்தல் பதவிகளுக்கான ஏலம், குழுக்கள் முறை என்ற குற்றச்சாட்டு வரவில்லை என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆட்சியர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க, விதிகளை கண்காணிக்க பறக்கும் படை நாடாளுமன்ற தேர்தலில் போடப்பட்டது போல உள்ளாட்சி தேர்தலில் போட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒரு பறக்கும் படை என்ற விதத்தில் 3 ஷிப்ட்டாக 24 மணி நேரமும் பணியில் ஈடுபடும் வகையில் பணியில் ஈடுபடுத்த உள்ளோம். மொத்தம் 18 பறக்கும் படை குழு போடப்பட்டுள்ளது. நாளை முதல் பறக்கும் படை பணியில் ஈடுபடவுள்ளனர். தேர்தல் நன்னடத்தை அடிப்படையில் பறக்கும் படை பணி இருக்கும்.ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பதால் கிராம ஊராட்சிகளில் மட்டுமே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும். மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் பொருந்தாது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அலுவலர் என்ற அடிப்படையில் கிராமப்பகுதியை ஒட்டிய நகர் பகுதியில் கூட தேர்தல் நன்னடத்தை விதிகள் மீறப்படுவதாக புகார் வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

1520 மொத்த வாக்குச்சாவடிகளில் 84 இடங்கள், 214 பூத் இருக்கக்கூடிய பகுதிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு காவல்துறையினருடன் இணைந்து கூடுதல் காவலர்கள், சிசிடிவி, வீடியோ உதவியுடன் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இருந்ததுபோல, மத்திய நுண்ணறிவு தேர்தல் அலுவலர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் நியமிக்க திட்டமிட்டுள்ளோம்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்படையான, நேர்மையான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு தருவதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் கட்சியினர் உறுதி அளித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் இதுவரை தேர்தல் பதவிகளுக்கான ஏலம், குழுக்கள் முறை என்ற குற்றச்சாட்டு வரவில்லை.16ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கலுக்கான அவகாசம் உள்ளதால் இருப்பதால் வாக்காளர்கள் இணைப்பு, நீக்கம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வேட்பாளர் செலவு செய்ய வேண்டிய தொகை தொடர்பாகவும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தெளிவாக எடுத்துக்கூறப்பட்டது. வாக்காளர் பட்டியல் முக்கிய பட்டியலின்றி supplementary பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். 18005996000, 04222301587 ஆகிய இலவச அலைப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் உள்ள 16 சோதனைச்சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அங்குள்ள வாக்குச்சாவடிகளையும் பற்றமானவைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக காரமடை பதற்றமானவை என்றும், அதில் தூமனூர், ஆனைக்கட்டி ஆகிய பகுதிகளில் 73 பூத், பெரியநாயக்கன்பாளையம் 16 பூத் , அதைப் போல பொள்ளாச்சி வடக்கு, தெற்கு 73 பூத் ஆகியவை பழங்குடியினர் வாசிக்கக்கூடிய வனப்பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும்.

மேலும் படிக்க