• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோத்தகிரியில் புலிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

December 14, 2019

நீலகிாி மாவட்டம் கோத்தகிாி அருகே கிராமத்தில் இரண்டு புலிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

நீலகாி மாவட்டம் கோத்தகிாி அருகே உள்ள சுண்டட்டி கிராம பகுதிகளில் கடந்த சில தினங்களாக 2 புலிகள் அப்பகுதிகளில் உலா வருகின்றன. இந்த இரண்டு புலிகள் 6 மாடுகள் 12 ஆடுகள் வேட்டையாடி உள்ளன, இதனால் அப்பகுதி மக்கள் அச்சம்அடைந்துள்ளனா்.

இந்த நிலையில் புலியின் நடமாட்டம் அப்பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனா்.மேலும் இப்பகுதியில் சுற்றித்திாியும் புலிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

2 புலிகள் நடமாட்டத்தால் அப்பகுதி கிராம மக்கள் வெளியில் செல்லவும் பணிகளை மேற்கொள்ளவும் மிகுந்த அச்சடைந்துள்ள னர்.

மேலும் படிக்க