• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் ஒருநாள் சுற்றுலா திட்டம் தொடக்கம்

December 14, 2019

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் ஒருநாள் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா மையங்கள் அதிகம் இருக்கும் பகுதியாக திகழ்ந்து வருவது கோவை மாவட்டம். இதனால் நாள்தோறும் வெளி மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் கோவையை நோக்கி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகம், இந்நிலையில் கோவையில் உள்ள சுற்றுலா மையம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் ஒருநாள் சுற்றுலா திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி காலை 7 மணிக்கு துவங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பயணம் குரங்கு அருவி,பாலாஜி கோவில்,வால்பாறை மற்றும் ஆழியாறு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை பார்த்த பின்னர் மீண்டும் இரவு 8 மணிக்கு கோவை வந்தடைகிறது. காலை,
மதிய உணவு தேனீர் என பயணிகளுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பயனத்திற்காக 1100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இத்திட்டத்தால் கோவை மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களும் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க