• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2019ல் இந்தியர்கள் கூகுளிடம் அதிகம் கேட்ட கேள்விகள் எவை?

December 13, 2019 தண்டோரா குழு

2019ம் ஆண்டு இந்தியர்களால் அதிகளவு தேடப்பட்ட நிகழ்வுகள், பிரபலங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்ற பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் கூகுளில் அதிக அளவில் அதிகளவு தேடப்பட்ட நிகழ்வுகளை கூகுல் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2019ம் ஆண்டு இந்தியர்களால் அதிகளவு தேடப்பட்ட நிகழ்வுகள், பிரபலங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்ற பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதன்படி, கூகுளில் அதிகளவு தேடப்பட்ட நிகழ்வுகளில் இந்த ஆண்டு நடந்த ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் முதலிடம் பிடித்துள்ளது. 2வது இடத்தை இந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிடித்திருக்கிறது. தேர்தல் தேதி, பிரச்சாரம், கூட்டணி தொடர்பான விஷயங்களை தெரிந்து கொள்ள இந்தியர்கள் அதிகளவு ஆர்வம் காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. மூன்றாவதாக சந்திராயன் 2 பற்றி இந்தியர்கள் அதிகளவு தேடி உள்ளனர். அர்ஜூன் ரெட்டி படத்தில் இந்தி பதிப்பான கபீர் சிங் 4ம் இடத்தையும், உலகளவில் வசூல் சாதனை புரிந்த அவெஞ்சர் எண்டு கேம் 5ம் இடத்தையும் பிடித்திருக்கின்றன.

அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகள்

1. உலகக்கோப்பை கிரிக்கெட்
2. லோக்சபா தேர்தல்
3. சந்திராயன்-2
4. கபீர் சிங்
5. அவெஞ்சர் எண்டு கேம்

இந்தியர்கள் கூகுளிடம் அதிகம் கேட்ட கேள்விகள் பட்டியலையும் கூகுள் வெளியிட்டுள்ளது. அதில் காஷ்மீர் மீதான சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை அடுத்து, 370 என்றால் என்ன என்ற கேள்வியை இந்தியர்கள் அதிகளவு தேடியுள்ளனர். மேலும்,எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு என்றால் என்ன? ஹவுடி மோடி என்றால் என்ன? இ-சிகரெட் என்றால் என்ன? போன்ற கேள்விகளை கேட்டுள்ளனர்.

அதிகம் தேடப்பட்ட கேள்விகள்:

1. 370வது பிரிவு என்றால் என்ன?
2.EXIT POLL கருத்துக்கணிப்பு என்றால் என்ன?
3.கருந்துளை என்றால் என்ன?
4.ஹவுடி மோடி என்றால் என்ன?
5.இ-சிகரெட் என்றால் என்ன?

அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்:

1.அபிநந்தன் வர்த்தமான்
2.லதா மங்கேஷ்கர்
3.யுவராஜ் சிங்
4.ஆனந்த் குமார்
5.விக்கி கவுஷல்

அதிகம் தேடப்பட்ட படங்கள்:

1.கபீர் சிங்
2.அவெஞ்சர் எண்டு கேம்
3.ஜோக்கர்
4.கேப்டன் மார்வெல்
5.சூப்பர் 30

மேலும் படிக்க