• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம் – இந்தியா வாழ் இலங்கை தமிழர்கள் வேதனை

December 13, 2019

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை என இந்தியா வாழ் இலங்கை தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்து குடியமர்ந்தவர்களில் , முஸ்லிம் அல்லாதவர்களுக்கு , இந்திய குடியுரிமை கிடைக்க வழி செய்யும் , குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை இரவு நிறைவேறியது.

இந்திய அரசமைப்புச் சட்டம் , குடிமக்களிடையே மதப் பாகுபாடு காட்டுவதில்லை. இந்நிலையில் மத அடிப்படையில் சிலருக்கு குடியுரிமை கிடைக்கவோ, மறுக்கவோ வகை செய்யும் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று எதிர் கடசிகளான, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் , மக்களவையில் தங்கள் எதிர்ப்பை கடுமையாகப் பதிவு செய்துள்ளன.இலங்கையின் சிங்களர், பௌத்த பேரின வாதத்தால் பாதிக்கப்பட்டு, இலங்கையிலிருந்து வெளியேறி தமிழகத்தில் முப்பதாண்டுகளாக வசிக்கும் இந்து அகதிகளான தமிழர்களை மத்திய அரசு சேர்க்காதது , தமிழர்களிடம் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் மேல் இலங்கை தமிழர்கள் அகதிகளாக முகாம்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் முப்பதாண்டுகளுக்கு மேலாக இந்திய குடியுரிமை வேண்டும் என மத்திய ,மாநில அரசிடம் மனு கொடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கடந்த ஜீன் மாதம் குடியுரிமை கேட்டு மனு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த திங்களன்று நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்கள் சேர்க்கப்படவில்லை. இது இந்தியாவில் அவர்களுக்கு குடியுரிமை அளிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளதை காட்டுவதாக, கோவை இலங்கை அகதிகள் முகாம் தலைவர் திலக்ராஜ் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவிற்கு அகதிகளாக வந்து முப்பது ஆண்டுகள் ஆவதாகவும், தங்கள் குழந்தைகளும் , அகதிகளாகவே வசித்து வருவதாக தெரிவித்தார். மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் குடியுரிமை பெற்றுள்ள போது இந்தியாவை நம்பி வந்த தங்களுக்கு கொடுக்காதது வருத்தமளிப்பதாகவும், இலங்கையில் சென்று குடியமர இந்திய இலங்கை அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அகதிகள் முகாமில் இருந்த பெண்கள் பேசும்போது,

4 வயதில் இந்த முகாமிற்கு வந்ததாகவும், தற்போது 34 வயதான பின்பும் அகதிகளாக வாழ்ந்து வருவது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். கல்வி, வேலைவாய்ப்பில் சலுகைகள் கிடைக்காமல் கஷ்டப்படுவதாக தெரிவித்தார். வங்கிக்கடன் அகதிகள் என்பதால் மறுக்கப்படுவதாகவும் வேதனையோடு கூறினார். மேலும் பள்ளியில் குழந்தைகள், அகதிகள் என்பதால் ஒசி பிரிவில் சேர்க்கப்பட்டு, அரசின் சலுகைகள் கிடைக்காமல் இருப்பதாகவும் அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர்.அகதிகளை யாராவது அடித்தால் , அகதிகள் மேலையே வழக்கு தொடுக்கப்படுவதாகவும், உரிமைகளை இழந்து நடைபிணமாக வாழும் சக தமிழர்களை , தமிழர்களே கண்டு கொள்ளாதது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அகதிகள் முகாம் குறித்து, செய்தி சேகரிக்க செல்லும் நிருபர்கள் கட்டாயம் தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டுமென க்யூ பிரிவு போலீசார் வற்புறுத்துவது , தமிழக அரசுக்கும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க கூடாது என்ற எண்ணம் இருப்பதாகவே தோன்றுகிறது.

இரு நாடுகளும் இணைந்து இவர்களுக்கு ( இலங்கை இந்து தமிழர்களுக்கு ) குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க