• Download mobile app
20 Jan 2026, TuesdayEdition - 3632
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேடந்தாங்கலாக மாறி வரும் கோவை சிங்காநல்லூர் குளம்

October 11, 2016 தண்டோரா குழு

பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் வேடந்தாங்கலாக மாறி வரும் கோவை சிங்காநல்லூர் குளம்.

கோவை சிங்காநல்லூர் அருகே திருச்சி சாலையில் அமைந்துள்ளது சிங்காநல்லூர் குளம். குளத்தின் பரப்பளவு சுமார் 300 ஏக்கர். கோடை காலத்திலும் தண்ணீர் வற்றாத குளம் என்பதால் பறவைகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

பறவைகளின் வருகையால் அழகாக காட்சியளிக்கும் இக்குளம் உள்ளூர் வாசிகளின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக உள்ளது. காலை, மாலை நடைபயிற்சி மேற்கொள்ள வரும் நபர்கள் பறவைகளின் அழகை கண்டு வியந்து பார்வையிட்டு செல்வார்கள்.

இந்திய பறவைகள் மட்டுமின்றி அமெரிக்கா, சைபீரியா நாட்டைச் சேர்ந்த பறவைகளும் இங்கு வந்து செல்கின்றன. மேலும் இக்குளத்தில் பல அரிய வகையான தாவரங்களும் காணப்படுவதால் நகர்ப்புற இயற்கை விளக்க கல்வி மையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் அங்குள்ள தாவரங்கள் பற்றி ஆராய்சியிலும் ஈடுபடுகின்றனர்.

கோவை மாநகரின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இக்குளம் விளங்குகிறது. இதன் அருகில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் இக்குளத்தை நம்பியே உள்ளது .செப்டம்பர் மாதம் வெளிநாட்டின் பறவைகள் வரத்து அதிகம் காணப்படும் எனவும் தண்ணீர் எப்போதும் வற்றாமல் இருப்பதால் இக்குளத்தில் மீன்கள் அதிகளவில் உள்ளது என்பதாலும் பறவைகளின் உணவிற்கு மீன்கள் பஞ்சமில்லாமல் கிடைக்கிறது.

வன அதிகாரிகளின் முயற்சியால் பறவைகள் வேட்டையாடபடாமல் தடுக்கப்படுகிறது. இக்குளத்தின் அழகை பாதுகாக்க கோவை மாநகராட்சி ஆகாய தாமரை படராமல் அவ்வப்பொழுது அதனை அகற்றி வருகிறது. இவ்வளவு சிறப்பு மிக்க இக்குளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற கோரி இயற்கை ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க