• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கோவையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

December 11, 2019

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.எப்.ஐ அமைப்பை சேர்ந்த கோவை அரசுகலைக்கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்துள்ளது. இந்த புதிய மசோதாவின் படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து ஆவணங்கள் இல்லாமல் வரும் முஸ்லீம் அல்லாத மக்கள் இந்தியாவில் 6 ஆண்டுகள் வாழ்ந்தால் குடியுரிமை வழங்க்ப்படும் என்றும், முஸ்லீம்களுக்கு இந்த குடியுரிமை வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவிற்குள் வரும் மக்களைப் பற்றி இந்த மசோதா எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக கூறி எஸ்.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியா முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சுமார் 20 பேர் கல்லூரி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது மத்திய அரசின் இந்த புதிய குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து எஸ்எப்ஐ கோவை மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா கூறுகையில்,

” இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திட்டமிட்டுப் முஸ்லிம் மக்களை புறக்கணித்து அதற்காக இந்த சட்டம் தற்போது கொண்டு வரப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜனநாயக முறையில் போராடும் மாணவர்கள் மீது போலீசார் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் இது கண்டனத்துக்கு உரியது.” என்றார்.

மேலும் படிக்க