• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறு துளை சிகிச்சை மூலம் மூவருக்கு சிறுநீரகக் கல் அகற்றி கோவை அரசு மருத்துவமனை சாதனை

December 11, 2019

அரசு மருத்துவமனைகளில் முதல்முறையாக சிறு துளை சிகிச்சை மூலம் மூவருக்கு சிறுநீரகக் கல் அகற்றி கோவை அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

இது குறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் அசோகன் கூறும்போது,

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3.65 கோடி மதிப்பிலான நவீன எந்திரங்கள் மூலம் சிறுநீரக கல் அகற்றும் சிகிச்சை மேற்கொண்டுபட்டு வருகிறது. சிறுநீரகத்தில் 5 முதல் 15 மில்லி மீட்டர் அளவுள்ள கற்கள் இ.எஸ்.டபிள்யூ.எல்., சிகிச்சை மூலம் அகற்றி ஆண்டுதோறும் 350 முதல் 400 பேர் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக பயன் பெற்று வருகின்றனர்.

மேலும் 15 மில்லி மீட்டர் அளவுக்கும் அதிகமான கற்கள் இருக்கும் பட்சத்தில் பொ்குடேனியஸ் நெப்ரோ லிதாடமி சிகிச்சை முறையில் அகற்றப்பட்டு வருகிறது.உடல் பருமன் கொண்டவர்களுக்கு சிகிச்சையின் போது பல்வேறு சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புண்டு தற்போது ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு துளையிட்டு புதுவித அறுவை சிகிச்சை மேற்கொண்டு பட்டுள்ளது.
பொ்குடேனியஸ் நெப்ரோ லிதாடமி துளை சிகிச்சை மூலம் 20 முதல் 25 மில்லி மீட்டர் அளவுள்ள சிறுநீரகக்கற்கள் மூவருக்கு வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது சிகிச்சைக்கு பிறகு நோயாளிகள் இரண்டு மணி நேரத்திற்கு குணமடைகின்றனா்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக சிகிச்சை செய்யப்பட்டுள்ளது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு 1.5 லட்சம் செலவாகும். காப்பீட்டு திட்டத்தில் இங்கு இலவசமாக செய்து கொள்ளலாம் எனக் கூறினார்.

மேலும் படிக்க