• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜனவரி 3ம் தேதி துவங்குகிறது கோவை விழா

December 10, 2019 தண்டோரா குழு

கோவை விழா 2020′ வரும் ஜனவரி மாதம் 3ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவை மாவட்டத்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கோவை மாநகராட்சி சார்பில் ஆண்டுதோறும் ‘கோவை விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது. சுமார் 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்காக கலைநிகழ்ச்சிகள், புட் ஸ்டிரீட் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில் ஜனவரி 3ம் தேதி கோவை விழா துவங்குகிறது. தொடர்ந்து 12வது ஆண்டாக நடைபெறும் இந்த விழா ஜனவரி 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.

விழாவின் முன்னோட்ட கூட்டம் இன்று மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், கப்பற்படையின் கமேண்டிங் அதிகாரி அசோக் ராய் முன்னோட்ட நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். தொடர்ந்து கோவை விழா துவங்கியது முதல் நிறைவடையும் வரை அன்றாடம் நிகழ்ச்சிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

கோவை விழாவில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் பின்வருமாறு:

ஜனவரி 3 – இசை நிகழ்ச்சிகள்

ஜனவரி 5 – கோவை விழா மாரத்தான், ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள்.

ஜனவரி 10 & 12 :
கோவையின் முக்கிய நகரங்கள் ஒரே இடத்தில் உணவு பரிமாறும் நிகழ்ச்சி கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது

ஜனவரி 11& 12 : கலைத்தெரு நிகழ்ச்சிகள், பயிலரங்குகள், தொழில் முனைவோருக்கான அடித்தளமாக ‘தி பிட்ச்’ என்ற பெயரில் முதலீடுகளை திரட்டும் நிகழ்ச்சி, விண்டேஜ் கார் கண்காட்சி.

மேலும், பல்வேறு நிகழ்ச்சிகள், காமெடி பெஸ்டிவல், படகு காட்சி, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிழ்ச்சிகள் இந்தாண்டு கோவை விழாவில் நடைபெற உள்ளன.

இந்த முன்னோட்ட நிகழ்ச்சியில், கோவையை சேர்ந்த தொழில் முனைவோர், விழா நன்கொடையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க