• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் 33-ஆவது பட்டமளிப்பு விழா

December 10, 2019

எதிர் கால இந்தியா எதிர் கொள்ளும் சிக்கல்களை ஊக்கத்துடனும், முனைப்புடனும் கையாளும் திறமை படைத்தவர்கள் இன்றைய மாணவ, மாணவிகள் என கோவையில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பாரதியார் பல்கலைகழக துணை வேந்தர் முனைவர் காளிராஜ் புகழாரம் சூட்டியுள்ளார்.

கோவை பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் 33-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.பி.எஸ்.ஜி. அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இதில் வகித்தார். கல்லூரி முதல்வர் பிருந்தா அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் காளிராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

இன்றைய இளைய பட்டாதாரிகளே இந்தியாவின் கண்கள் எனவும்,எதிர் கால இந்தியா எதிர் கொள்ளும் சிக்கல்களை ஊக்கத்துடனும், முனைப்புடனும் கையாளும் திறமை படைத்தவர்கள் என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர்,தற்போதைய மாணவ,மாணவிகள் கணித பாட திட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு கொண்ட அவர்,நம்பிக்கையோடு தங்களது கனவுகளை நோக்கி மாணவர்கள் பயணிக்க வேண்டும் என தெரிவித்தார்.

விழாவில், 2323 பேருக்கு இளங்கலைப் பட்டமும், 824 பேருக்கு முதுகலைப் பட்டமும், 37 பேருக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது. இதில், திரளான மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க