• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல் ? – உளவுத்துறை உஷாரால் பதட்டம்

December 10, 2019

தமிழக – கேர்ள் எல்லை அட்டப்பாடி மஞ்சுகண்டி வனப்பகுதியில் அக்டோபர் 28- ந்தேதி காலை பெண் உட்பட 4 மாவோயிஸ்டுகளை கேரள தண்டர் போல்ட் போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனால் மாவோயிஸ்டுகள் நீலகிரி கோவை வெளிமாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட வெள்ளருக்கம்பாளையம் மலை அடிவாரத்தில் உள்ள பழைமைவாய்ந்த வேட்டைக்காரன் கோவில். அடந்த வனப்பகுதியில் உள்ள இக்கோவிலுக்கு பக்தர்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சென்று சாமி தரிசனம் செய்து வருவர். அதன் பின்னர் கோவில் பூசாரி மட்டும் அவ்வப்போது சென்று வருவார். இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் சமையல் செய்ததற்கான தடயம் மற்றும் காலி பால் டப்பா கிடந்தது. தொண்டாமுத்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக தகவல் வேகமாக பரவியது. மாவோஸ்டுகள் நடமாட்டம் குறித்து உளவுத்துறை க்கு தெரியவந்தது.

நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் பேரூர் பகுதி டிஸ்பி உள்ளிட்டவர்கள் தலைமையிலான போலீசார் வனப்பகுதியை ரொட்டி உள்ள அட்டுக்கல் , வெள்ளருக்கம்பாளையம் குப்பேபாளையம் பகுதியில் உள்ள ஆதிவாசிகள் மற்றும் மலைவாழ் கிராமங்களுக்கு சென்று தீவிர விசாரணை மற்றும் சோதனை நடத்தினர். சந்தேக நபர்கள் மற்றும் மாவோஸ்யிடுகள் நடமாட்டம் தென்பட்டால் தகவல் தெரிவிக்குமாறு ஆதிவாசி தலைவர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்களின் போலீசார் தெரிவித்தனர்.

குளிர்காலம் என்பதால் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து மாவோயிஸ்டுகள் இடம் பெயர்ந்து ஆதிவாசி மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கும் இடம் அருகே சிறிது காலம் வசிப்பது வழக்கம். மஞ்சு கண்டி வனப்பகுதியில் நடந்த என்கவுண்டரை அடுத்து மாவோயிஸ்டுகள் கேரள வனப்பகுதியொட்டியுள்ள ஆதிவாசி கிராமங்களுக்கு செல்ல முடியாமல் கோவை ஆதிவாசி குடியிருப்பு அருகே ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.இதனால் வனப்பகுதியொட்டியுள்ள கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க