• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைக்கு இரண்டு கண்டெய்னர் லாரியில் வந்த எகிப்து நாட்டு வெங்காயம்

December 9, 2019

எகிப்து நாட்டு வெங்காயம் கோவை எம்ஜிஆர் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு 60 டன் பெரிய வெங்காயம் இரண்டு கண்டெய்னர் லாரியில் இருந்து வந்தது.

நாடு முழுவதும் பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது ஒரு கிலோ பெரிய வெங்காயம் 180 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. வெங்காயத்தின் தட்டுப்பாட்டை சமாளிக்க எகிப்து, துருக்கி போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி எகிப்து நாட்டில் இருந்து கப்பலில் 10 நாட்களுக்கு பயணித்து மாதாவுக்கு வெங்காயம் வந்தது. அங்கிருந்து இரண்டு நாட்களில் இரண்டு லாரிகளில் கோவை வந்து சேர்ந்தன. 30 டன் எடை கொண்டவை 19 கிலோ எடை கொண்ட நைலான் சாக்குப்பையில் நிரப்பிக்கொண்டு வரப்பட்டன.

இது குறித்து வெங்காய இறக்குமதியாளர் கூறுகையில்,

எகிப்து வெங்காயம் நல்ல காரத்தன்மை கொண்டது. நம்ம ஊர் வெங்காயம்-2 பயன்படுத்துவதற்கு பதிலாக அரை அல்லது ஒரு வெங்காயம் பயன்படுத்தினால் போதும். உணவின் சுவை மேலும் கூடும் தற்போது கிலோ 130 ரூபாய்க்கு விற்கிறது. வரத்து அதிகரித்து அதிகரிக்க விலை குறையும் என்றார்.

மேலும் படிக்க