• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் நவீன மருத்துவமனை திறப்பு

December 8, 2019 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரத்தில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மிக நவீன கண்சிகிச்சை மருத்துவமனையை தொடங்கியிருக்கிறது.

இம்மருத்துவமனையை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைமை செயலாக்க அதிகாரி டாக்டர். அதில் அகர்வால், இக்குழுமத்தின் மருத்துவ சேவைகளுக்கான மண்டல தலைவர் டாக்டர். கலாதேவி சதீஷ் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம், ஊரக மேம்பாடு மற்றும் சிறப்பு செயல்திட்ட அமலாக்க துறையின் மாண்புமிகு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார். இத்தொடக்க விழா நிகழ்வில் 250-க்கும் அதிகமான நபர்கள் கண்தானம் செய்ய முன்வந்து வாக்குறுதியை வழங்கியது இந்நிகழ்விற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.

கண் மருத்துவ சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்கு அவசியமான, நவீன, சமீபத்திய சாதனங்கள் அனைத்தும் இப்புதிய மருத்துவமனையில் இடம்பெற்றிருக்கின்றன. முழுமையான கண் பராமரிப்பு சேவைகளை இது வழங்குவதோடு, மேம்பட்ட மற்றும் சிக்கலான கண் அறுவை சிகிச்சைகளும் இம்மருத்துவமனையில் செய்யப்படும்.

மருத்துவமனை திறப்புவிழாவில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,

“கோயம்புத்தூரில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் புதிய மருத்துவமனையை தொடங்கிவைப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே, மருத்துவ சுற்றுலாத்துறையில், குறிப்பாக, கண் மருத்துவவியலில் தமிழ்நாடு மாநிலமானது இந்தியாவில் முதன்மை இடத்தை தனக்கென கைவசப்படுத்தியிருக்கிறது. சென்னை மாநகரம் மட்டுமல்லாமல், நாடு முழுவதிலுமே கண்கள் தொடர்புடைய சிகிச்சைக்கு மக்கள் விரும்பி தேர்வு செய்யும் சிகிச்சை மையமாக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை புகழ்பெற்றிருக்கிறது. கண்சிகிச்சை மற்றும் பராமரிப்பில் புதிய தரநிலைகளில் தொடங்கப்பட்டிருக்கும் இப்புதிய மருத்துவமனை நிறுவும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
இம்மருத்துவமனை கோயம்புத்தூர் மட்டுமல்லாமல், அருகிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களிலுள்ள மக்களுக்கும் பெரும் பயனளிப்பதாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை,” என்று கூறினார்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைமை செயலாக்க அதிகாரி டாக்டர். அதில் அகர்வால் பேசுகையில்,

“கண் மருத்துவ சிகிச்சையில உலகத்தரம் வாய்ந்த இந்த மாபெரும் மருத்துவமனையை நிறுவி தொடங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இம்மாநகரின் மிகப்பெரிய மற்றும் மிகநவீன மருத்துவமனைகளுள் ஒன்றாக இது இருக்கிறது. 1957 ஆம் ஆண்டிலிருந்தே கண் மருத்துவ சிகிச்சைப்பிரிவில் நோயாளிக்கு கனிவான சிகிச்சை மற்றும் நவீன மீது நாங்கள் தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வந்திருக்கிறோம். அடுத்த 3-5 ஆண்டுகள் காலத்திற்குள் 50-75 மருத்துவமனைகளை புதிதாக எமது வலையமைப்பில் சேர்க்க நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். பெருநகரங்கள் மட்டுமல்லாமல், இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை நகரங்களிலும் இதற்கான முக்கிய கூர்நோக்கம் செலுத்தப்படும். எமது வளர்ச்சியின் முன்னிலையில், தொழில்நுட்பமும் தொடர்ந்து இருக்கும். எமது சிகிச்சை மையங்கள் அனைத்திலும் ஸ்மைல் மற்றும் ரோபோட்டிக் கண்புரை அறுவைசிகிச்சை போன்ற மிக சமீபத்திய தொழில்நுட்பங்கள் மீது அதிகளவு நாங்கள் முதலீடு செய்யவிருக்கிறோம். மக்கள் அமைவிடங்களுக்கு அருகிலேயே உயர்தர கண் சிகிச்சை பராமரிப்பை கட்டுபடியாகக்கூடிய மலிவான கட்டணங்களில் வழங்குவதே எங்களது நோக்கமாகும்,” என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க