• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரயில் மோதி இந்தாண்டில் சுமார் 800 பேர் உயிரிழந்துள்ளனர் – ரயில்வே எஸ்.பி. மகேஸ்வரன்

December 6, 2019

ரயில் மோதி இந்தாண்டில் சுமார் 800 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இவ்வகையில் சென்னையில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் ரயில்வே எஸ்.பி. மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்

கோவை இருப்பு பாதை காவல் நிலையத்தில் ரயில்வே காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

அப்போது பேசிய அவர்,

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் 200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
இந்தாண்டில் சுமார் 800 பேர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.ரயில் மோதி உயிரிழப்போர் எண்ணிக்கை சென்னையில் அதிகமாக உள்ளனர்.

ரயில் மோதி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்விபத்துகளுக்கு விழிப்புணர்வு இல்லாததே காரணம். விதிமீறி ரயில் பாதைகளை கடப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். சிறிய ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ரயில் மற்றும் ரயில் நிலையங்இளில் பெண்கள் பாதுகாப்பிற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ரயில் பாதைகளில் மது அருந்துவதை தடுக்க, ரயில் பாதைகளுக்கு அருகேயுள்ள மதுக்கடைகளை கண்டறிந்து அவற்றை இடமாற்ற கோரி மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுத உள்ளோம்.ரயில்வே காவல் துறையில் 20 சதவீதம் காவலர்கள் பற்றாக்குறை உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க