• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்கவுன்ட்டர் நிகழ்விடத்தில் மலர் தூவி போலீஸாரைக் கொண்டாடிய பொதுமக்கள்;

December 6, 2019

தெலுங்கானாவில் கடந்த நவ.,27 ல், தெலுங்கானாவில் பணி பணி முடிந்து இரவு வீடு திரும்பிய பெண் டாக்டரை, உதவி செய்வது போல் கடத்திச் சென்று லாரி டிரைவர்கள் 4 பேர் பலாத்காரம் செய்தனர். பின்னர் அப்பெண்ணின் வாயில் கட்டாயப்படுத்தி விஸ்கியை ஊற்றி, அவரை மயக்கமடையச் செய்து, பலாத்காரம் செய்து, பின் கழுத்தை நெறித்து கொலை செய்து , உடலை எரித்தனர்.

இந்த கொடூரத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள், கிளீனர்கள் என கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையில்,குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் வலுத்தது.குற்றவாளிகள் 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இவ்வழக்கில் கைதான 4 பேரும் போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றபோது 4 பேரும் தப்பிசெல்ல முயற்சி செய்துள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி அவர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் அறிவித்துள்ளது.

இதற்கு நாடு முழுவதும் பரவலாக வரவேற்பும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது. தெலங்கானா மாநில மக்கள் போலீஸாரைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சம்பவ இடத்தில் திரண்ட மக்கள் அங்கிருந்த போலீஸார் மீது பாலத்தின் மேல் இருந்தவாறே ரோஜா மலர்களைத் தூவி வாழ்த்தினர். டிசிபி வாழ்க; ஏசிபி வாழ்க என கோஷமிட்டனர். பெண் மருத்துவரின் அண்டை வீட்டார் திரண்டு வந்து போலீஸாருக்கு இனிப்புகளை வழங்கினர். சிலர் போலீஸாரை தங்களின் தோள்களின் மீது தூக்கி ஆரவாரம் செய்தனர். மேலும், தெலங்கானா முழுவதுமே மக்கள் ஒரேமாதிரியான மகிழ்ச்சி மனநிலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க