• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற 2 பேர் கைது

December 5, 2019 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் அருகே கள்ள நோட்டை மாற்ற முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி குற்றங்கள் நடந்ததால், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமை காவலர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், சம்பவத்தன்று சிங்காநல்லூர் அருகே உள்ள ஒரு சிப்ஸ் கடையில் இரண்டு நபர்கள் கடையில் பொருள் வாங்கிவிட்டு பணம் கொடுத்த பொழுது கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்படவே வேறு நோட்டை கொடுக்குமாறு கூறினார். அவர்கள் வேறு நோட்டை கொடுத்தபோதும் மீண்டும் அவருக்கு சந்தேகம் ஏற்படவே அவர்களிடம் இந்த பணம் வேண்டாம் என்று கூறிக் கொண்டிருந்த பொழுது, அப்பொழுது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் தலைமை காவலர் கோவிந்தராஜ் அந்தக் கடையில் வாக்குவாதம் செய்த இருவரை கூப்பிட்டு விசாரிக்கவே அவர்கள் நைஸாக தப்பி ஓட முயன்றனர். அப்பொழுதே போலீசார் அவர்களை துரத்தி பிடித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்பு விசாரித்ததில் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தை சேர்ந்த பிரான்சிஸ் என்பவரது மகன் அரசியல் பிரான்சிஸ் வயது 29, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்தூர் வடக்கு ரத வீதியை சேர்ந்த செந்தூர்பாண்டி என்பவரது மகன் பாஸ்கர் வயது 30 ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க