• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் டிசம்பர் 8ல் சிறப்புக்குழந்தைகளுக்கான ‘ஸ்பெஷல் வாக்கத்தான்

December 4, 2019

சிறப்புக் குழந்தைகளுக்கான ஸ்பெஷல் பார்க்கத்தான் என்ற நடைபயண நிகழ்ச்சி கோவையில் வரும் எட்டாம் தேதி நடைபெறுகிறது.

கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளி சார்பில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு வாகத்தான் நடைபயணம் கோவையில் வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

அப்போது கௌமாரம் பிரசாந்தி பள்ளியின் நிறுவனர் மற்றும் இயக்குனர் தீபா மோகன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

எங்கள் பள்ளி சார்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்பெஷல் வாக்கத்தான் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது சமுதாயத்தில் சிறப்பு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது முயற்சியாக வரும் டிசம்பர் 8-ஆம் தேதி கோவை நேரு ஸ்டேடியத்தில் ஸ்பெஷல் வாகத்தான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் வேற்றுமையிலும் ஒருங்கிணைந்த சமுதாயமாக இருக்க வேண்டும் என்ற மையக் கருத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.இதற்கு மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறோம். இதில் 2500ல் இருந்து 3000 பங்கேற்பாளர்களை எதிர்பார்க்கிறோம்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கௌமாரம் பிரசாந்தி பள்ளியின் கல்வியியல் இயக்குனர் ஷர்மிளா கௌதம், ஒருங்கிணைப்பு இயக்குனர் ஸ்ரீலதா வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க