• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயிரிழந்த 17 பேர் குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை – முதல்வர் பழனிச்சாமி

December 3, 2019 தண்டோரா குழு

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்த 17 பேர் குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய அவர் அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிச்சாமி,

17 பேர் இறந்தது வேதனையளிக்கிறது. சுற்றுச்சுவர் கட்டிய சிவசுப்பிரமணியன் கைது செய்யப்படிருக்கிறார். சட்டரீதியாகவே இந்த விவகாரத்தை அணுக முடியும்; சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். விபத்து நடந்த பகுதியில் உள்ள ஓட்டு வீடுகளை அகற்றிவிட்டு, அவர்களுக்கு கான்கரீட் வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்கும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றார்.

மேலும் படிக்க