• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுபாளையத்தில் தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

December 3, 2019

17 பேரின் இறப்புக்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்த காவல் துறையை கண்டித்தும் , அவர்களை விடுதலை செய்யக்கோரியும், அனைத்து கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இதற்கு காரணமானவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், இறந்தவர்க்ளுக்கு தலா 25 லட்சம் இழப்பீடு ம்ற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறை தடியடி நடத்தி கைது செய்தனர். இதனை கண்டித்து திராவிட முன்னேற்ற கழகம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம், சிபி எம் விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் காந்திபுரத்தில் தமிழக அரசை கண்டித்து கோசங்க்ளை எழுப்பிய வண்ணம் ஊர்வலமாக வந்தவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். நியாயம் கேட்டு போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வேண்டும் எனவும் கோசங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 71 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பாதுகாப்பு கருதி இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் படிக்க