• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாளை மேட்டுப்பாளையம் செல்கிறார் முதல்வர் பழனிசாமி

December 2, 2019 தண்டோரா குழு

கோவை மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முதல்வர் பழனிசாமி
நடூர் கிராமத்திற்கு நாளை செல்கிறார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.நேற்றிரவு கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் ஏ.டி.காலனி பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் 10 அடி சுற்றுசுவர் இடிந்து அருகில் இருந்த மற்ற நான்கு வீடுகளின் மீது விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து தீயனைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து மீட்பு பணிகளை மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ, தாசில்தார் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்திரவிட்டுள்ளார்.

இந்நிலையில்,வீடுகள் இடிந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முதல்வர் பழனிசாமி நாளை மேட்டுப்பாளையம் செல்லவுள்ளார்.

மேலும் படிக்க