• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் – 4 பேர் கைது

November 30, 2019

கோவையில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ராகுல்(22), பிரகாஷ்(22),நாராயணமூர்த்தி(32),கார்த்திகேயன்(22) ஆகியோருடன் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே 26.11.2019 அன்று பிறந்தநாள் கொண்டாடுவதற்காக வெளியில் சென்றனர். அங்கு 4 பேரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய சிறுமி சோர்வாக இருப்பதைக் கண்டு பெற்றோர் விசாரித்தபோது, தன்னை 4 பேர் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியது குறித்து கூறினார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ஆர்எஸ் புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுல் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க