• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெற்றோர் திட்டியதால் மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

November 30, 2019

மதிப்பெண் குறைந்த மாணவனை பெற்றோர் திட்டியதால், மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணபதி லெனின் நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தீஸ்வரன். இவர் மர வேலை செய்து வருகிறார். இவரது மகன் அபினேஷ் கணபதி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நடந்து முடிந்த தேர்வில், ஒரு பாடத்தில் அபினேஷ்வர் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது பெற்றோர் அபினேஷை கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த அபினேஷ்வர், நேற்று மாலை டியூஷன் சென்று விட்டு, இரவு வீடு திரும்பவில்லை. அபினேஷை காணாமல், பதற்றம் அடைந்த பெற்றோரும், அவரது உறவினர்களும், அப்பகுதி முழுவதும் தேடி வந்தனர். மேலும் சரவணம்பட்டி காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் பீளமேடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ரயில் மோதி சிறுவன் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு வந்த தகவலையடுத்து, அபினேஷின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது அவர்களது மகன் என தெரியவந்தது. மேலும் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த அபினேஷ்வர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவன் பெற்றோர் திட்டியதால் , ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க