• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் 4 வது குடிநீர் திட்டத்தை ரத்து செய்ய கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

November 30, 2019

மேட்டுப்பாளையம் பகுதிக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுத்தும் திருப்பூர் 4 வது குடிநீர் திட்டத்தை ரத்து செய்ய கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை,திருப்பூர்,ஈரோடு,மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பவானி நதி தீர்த்து வருகிறது,கோவை மாநகராட்சி 3 வது குடிநீர் திட்டம் மூலம் 295 மில்லியன் லிட்டர் நீர் எடுக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.இந்த ஆண்டு திருப்பூர் 4 வது குடிநீர் திட்டத்திற்கு 196 மில்லியன் லிட்டர் நீர் எடுக்க திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.ஏற்கெனவே பில்லூருக்கும்_கீழ்பவானி அணைக்கும் இடையில் 16 குடிநீர் திட்டங்கள் உள்ளது.அதன் குடிநீர் தேவை 106 மில்லியன் லிட்டர்.கோவை திட்டம் மற்றும் திருப்பூர் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஏற்கெனவே உள்ள 16 திட்டங்களின் தேவை ஆக மூன்றும் சேர்த்து 597 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படும்.எனவே வருங்காலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு கோவை மூன்றாவது திட்டம் திருப்பூர் 4 வது திட்டங்களை சிறுமுகைக்கு கீழே உள்ள கீழ் பவானி நீர் தேக்கப்பகுதியிலிருந்து எடுத்திட தமிழக அரசை வலியுறுத்தியும் ரத்து செய்ய கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் மக்கள்நலப்பேரவை அமைப்பாளர் டி.டி.அரங்கசாமி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பா.அருண்குமார்,தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளர் அஷ்ரப்அலி,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர்அய்யூப்,ஜக்கிய ஜமாத் முகமது ஷரீப்,தி.மு.க நகர செயலாளர் முகமது யூனுஸ், மக்கள் நலப்பேரவை ஹபிபுல்லா,ம.தி.மு.க ஜெயகுமார்,பா.ம.க. மாநில துணைத்தலைவர் மின்னல் சிராஜ் பா.ஜ.க. உமாசங்கர், Pfi முகமது அலி,sdpi ஷபீக்,ஹக்கீம்,வக்கீல் ராஜேந்திரன்,வக்கீல் சாந்தமூர்த்தி,அப்துல்ஹக்கீம் கொங்கு மூர்த்தி,vmt.ஜாபர்,உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
.

மேலும் படிக்க