• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேக்கம்பட்டி யானைகள் முகாம் டிசம்பர் முதல் வாரத்தில் துவங்கும் என எதிர்பார்ப்பு.

November 30, 2019

மேட்டுப்பாளையத்தில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமிற்கான முதற்பட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவைமாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.கோவில்களில் ஆலய பணிகளுக்காக பயண்படுத்தப்படும் யானைகளுக்கு ஏற்படும் மனச்சோர்வையும் அதன் உடல் நலத்தை பாதுகாக்கவும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தபட்டு வருகிறது.

இந்த நிலையில் இவ்வாண்டு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமானது டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் துவங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்கான முதற்கட்ட பணிகள் தேக்கம்பட்டியில் யானைகள் முகாம் நடைபெறும் இடத்தில் துவங்கியுள்ளது.
யானைகள் கட்டிவைக்கப்படும் இடம், பாகண்கள் தங்குமிடம் போன்ற பகுதிகள் புதர் மண்டி கிடப்பதால் அதனை சீரமைக்கும் பணியில் இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யானை முகாம் நடைபெறும் இடத்தில் மின்சார வசதிகள், கூடாரங்கள் அமைப்பது போன்ற பணிகளும் மிக தீவீரமாக நடைபெற்று வருகிறது.

கோவில்களில் திருப்பணிகளை மட்டும் மேற்கொண்டு வரும் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த முகாமில் கடந்தான்டு 30 க்கும் மேற்பட்ட யானைகள் பங்கேற்ற நிலையில் இவ்வான்டும் முகாம் சிறப்புடன் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க