• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கையில் சிறை வைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் – கோத்தபய ராஜபக்சே

November 29, 2019 தண்டோரா குழு

இலங்கையில் சிறை வைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று (நவ.,28) டில்லி வந்தார். அவரை,
வெளியுறவு இணை அமைச்சர் விகே சிங் வரவேற்றார்.இன்று, ஜனாதிபதி மாளிகையில், கோத்தபய ராஜபக்சேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் கோத்தபய ராஜபக்சேவை வரவேற்று அதிகாரிகளை அறிமுகப்படுத்தினர்.

இதன்பின்னர் பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே,

லங்கை அதிபராக பதவியேற்ற பின் முதன்முறையாக இந்தியா வந்துள்ளேன். சிறப்பான வரவேற்பு அளித்த இந்திய அரசு, ஜனாதிபதிக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது பதவிக்காலத்தில், இந்தியா இலங்கை உறவுகளை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். இந்தியா மற்றும் இலங்கை இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.பாதுகாப்பு மற்றும் பொருளாதார பிரச்சினையில் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் குறிப்பிட்டார். மேலும், இலங்கையில் சிறை வைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என கூறினார்.

மேலும் படிக்க