• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே

November 28, 2019 தண்டோரா குழு

மஹாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து ‘மகா விகாஸ் அஹாதி’ எனப்படும் மஹாராஷ்டிரா மேம்பாட்டு முன்னணியை அமைத்தன. இந்த கூட்டணி தலைவராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டணி, கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடிதத்தை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வழங்கினார். இதையடுத்து ஆட்சி அமைக்க உத்தவ் தாக்கரேவுக்கு, கவர்னர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், மும்பை தாதர் பகுதியில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில், மஹாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவின் மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மஹாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள், மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் உத்தவ் தாக்கரே நவம்பர் 3- ஆம் தேதி சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் கெடு விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முதல்வருக்கு 166 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ள நிலையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை எளிதில் நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க