• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் திடீர் சாலை மறியல்

November 26, 2019

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள வலியுறித்தி மாநிலம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் பழனிசாமி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“25 குழந்தைகளுக்கு குறைவான பள்ளி சத்துணவு மையத்தை மூட கூடாது. காலியாக உள்ள பணியிடங்களில் புதிய நியமனம் செய்ய வேண்டும். சமையல் உதவியாளர்களுக்கு நிபந்தனையின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிலிருந்து ஓய்வு பெறும்போது குறைந்தபட்சம் ரூ 5 லட்சம் வழங்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும்.” என்றார்.

மேலும் படிக்க