• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் பாலியல் கல்வி நடத்திடவும் பெண்கள் பாதுகாப்பை நிலை நாட்டிட கோரியும் மாதர் சங்கம் மனு

November 22, 2019

அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் பாலியல் கல்வி நடத்திடவும் பெண்கள் பாதுகாப்பை நிலை நாட்டிட கோரியும் மாதர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அனைத்திந்திய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியோர் மனு அளித்தனர். கோவை மாவட்ட கல்வி நிலையங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமையை தடுக்க கோரியும், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கோரியும் தனிப்படை அமைத்து கண்காணிக்க கோரியும் போஸ்கோ சட்டம் குறித்து ஆசிரியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியா ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் கனகராஜ்,
கோவையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவது கண்டனத்திற்கு உரியது.அதை தடுத்து நிறுத்த போஸ்கோ சட்டம் பற்றி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ மாணவிகளுக்கு வாரம் ஒரு முறை பாலியல் பாடம் நடத்த வேண்டும் கூறினார்.
அதன் பின் பேசிய மாதர் சங்க உறுப்பினர் ஜூலி,
பாலியல் பற்றிய விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆசிரியர்களை தெய்வங்களாக நினைத்து தான் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம் என்றும் ஆனால் ஆசிரியர்கள் தவறாக நடந்து கொள்வது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். மேலும் இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க