• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

November 22, 2019

கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி திடீரென ஆய்வு நோயாளிகளைச் நேரில் சந்தித்து செய்யப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவற்றை கேட்டறிந்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் வசதி கழிப்பறை வசதி மற்றும் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக இருப்பிடங்கள் போன்றவற்றை கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து தங்களது குறைகளை புகார்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி திடீரென கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அவருடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அசோகன் உள்பட மருத்துவ குழுவினர் உடனிருந்தனர்.

மேலும் ஆய்வின்போது கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகள் குடிநீர் வழங்கும் இடம் மற்றும் நோயாளிகள் அவரது உறவினர்கள் போன்றவர்கள் வந்து செல்லும் இடங்கள் மற்றும் புற நோயாளிகள் பிரிவு சிறுநீரக பிரிவு உட்பட மருத்துவமனையில் உள்ள அனைத்து துறைகளிலும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அங்கு உள்ள நோயாளிகளிடம் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்தும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கின்றன என்பது குறித்தும் கேட்டறிந்தார் மேலும் இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் கோவை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் இங்கு உள்ள குடிநீர் வசதி கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மற்றும் இங்கு பொது மக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து அவர்களது குறைகளை நிவர்த்தி செய்வது போன்றவைதான் முக்கிய நோக்கம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்படும் அந்த ஆய்வின் அடிப்படையில் கோவை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க