• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடகோவையில் புதுப்பிக்கப்பட்ட மணி கோபுரம் திறப்பு

November 19, 2019

வடகோவை மேம்பாலம் அருகே அமைந்துள்ள மணி கோபுரத்தை கோயம்புத்தூர் சிட்டி ரவுண்ட் டேபிள் அமைப்பு கடந்த 1994ம் ஆண்டு கட்டியது. இந்த மணி கோபுரத்தை அப்போதைய மாநகராட்சி ஆணையர் சந்திரமவுலி திறந்து வைத்தார்.இந்த சூழலில், கோவை சிட்டி ரவுண்ட் டேபிள் அமைப்பு இந்த மணி கோபுரத்தை தற்போது புதுப்பித்துள்ளது.

ஜிபிஎஸ் கட்டுப்பாட்டுடன் இயங்கும் இக்கடிகாரத்தின் நாலா புறமும் உள்ள கடிகாரங்கள் ஒரே நேரத்தைக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த மணி கோபுரத்தை கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் சிட்டி ரவுண்ட் டேபிள் அமைப்பின் நிர்வாகிகள் ஜெயக்குமார், ராமதாஸ் ஜெயக்குமார், இளங்கோ மற்றும் அஷ்வின் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க