• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கைதாகிறாரா பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

November 18, 2019

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு வருமான வரி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபலதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தனது வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஞானவேல்ராஜாஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கிடையில், பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித்துறை தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில்,
இதை ஏற்றுக் கொண்ட எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் படிக்க