• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குழந்தைகளின் கிரியேட்டிவ் திறனை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற பல்வேறு விதமான போட்டிகள்

November 18, 2019

கோவையில் ராவ் மருத்துமனை சார்பாக ராவ்ஸ் சூப்பர் கிட்ஸ் எனும் தலைப்பில் குழந்தைகளின் கிரியேட்டிவ் திறனை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது.

விளையாட்டாக இருந்தாலும், பல்வேறு போட்டிகளாக இருந்தாலும் குழந்தைகள் வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் அதில் பங்கேற்பதையே மிகவும் மகிழ்ச்சியாக உணர்வார்கள்.இந்நிலையில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கல்வியை மட்டுமே தொடர்ந்து கற்றுக் கொடுக்காமல் அவற்றுடன் குழந்தைகளின் மனநிலைக்கு நடந்து கொள்ளும் வகையில் கோவை ராவ் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை சார்பாக சூப்பர் கிட்ஸ் பல்திறன் போட்டிகள் நடைபெற்றது. கோவை ஆர்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவன் பள்ளி அரங்கில் நடைபெற்ற இதில் ராவ் மருத்துவமனையின் தலைவர் ஆஷா ராவ் தலைமை வகித்தார்.இதில் விளையாட்டு , நடனம், பாடல் , மாறுவேடப் போட்டிகள் என பல்வேறு வகை போட்டிகள் நடைபெற்றன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் ஆஷா ராவ்,

இது போன்ற நிகழ்ச்சிகளால் குழந்தைகளும் உற்சாகமடைகின்றனர். இதன் வாயிலாக குழந்தைகளிடம் ‘கிரியேட்டிவிட்டி’ வளர்கிறது. அவர்களின் தனித் திறமைகளும் கண்டறியப்படுகிறது என தெரிவித்தார்.

இதில் குழந்தைகளும் பெற்றோர்களும் உற்சாகமாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் ஆலோசகர்கள் குழந்தைகளிடம் பெற்றோர்கள் நடந்து கொள்ளும் முறைகளும் அவர்களுக்கான உணவு முறை பழக்கம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அளித்தனர்.

மேலும் படிக்க