• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுக்கடையை மூடக்கோரி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

November 18, 2019

கோவை மாதம்பட்டியில் உள்ள மதுபான கடையை மூடக்கோரி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாதம்பட்டியில் அமைந்துள்ளது அரசு மதுபானக்கடை. இம்மதுபான கடை 24 மணி நேரமும் இயங்கி வருவதாக புகார் எழுந்தது. இங்குள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். மாணவர்களின் இப்போராட்டத்தில் தொடர்ந்து பொதுமக்களும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தையையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் மாதம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசு மதுபானக் கடையை அகற்ற கடந்த மூன்று வருடமாக போராடி வருவதாக தெரிவித்த இளைஞர்கள், இதற்கு மேலும் மதுபானக்கடை அகற்றப்படவில்லையெனில் அடுத்தகட்ட போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க