• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு வார விழாவில் ரூ.8.25 கோடிக்கு நலத்திட்ட உதவிகள்

November 16, 2019

கூட்டுறவு வார விழா விழாவில் அமைச்சர் எஸ். பி. வேலுமணி கலந்துகொண்டு ரூபாய் 8.25 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கோவை மாவட்டத்தில் 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா இந்தியா முழுவதும் 14. 11. 2019 முதல் 20. 11. 2019 வரை ஏழு நாட்களும் சிறப்பாக நடைபெற்று வந்தது. இதில் கோயம்புத்தூர் மண்டலத்தில் 14 ஆம் தேதி அன்று காலை கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு உலக வங்கி தலைவர் கொடியேற்றி கூட்டுறவு வார விழா வைக்கப்பட்டது. அதில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக இன்று மாவட்ட அளவிலான 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கோயம்புத்தூர் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் ராசா மணி தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ். பி வேலுமணி கலந்துகொண்டு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார். சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் போட்டியில் வெற்றி பெற்ற கூட்டுறவுத் துறை பணியாளர்கள் சங்கப் பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

இந்த விழாவில் அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். விழாவில் அமைச்சர் துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபணத்தை ரூ.11 லட்சத்து 32 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் நுண் ஊட்டச்சத்து கலவை உரம் உற்பத்தி நிலையத்தினையும் ரூ. 27 லட்த்து 77 ஆயித்து 300 மதிப்பீட்டில் செக்கு எண்ணெய் உற்பத்தி நிலையத்தினை தொடக்கி வைத்தார். விழாவில் 32 சுய உதவிக் குழுக்களுக்கு 377 பயனாளிகளுக்கு 8.5 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க