• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அயோத்தி வழக்கு; உச்சநீதிமன்றம் வழங்கியது தீர்ப்பே தவிர நீதியல்ல – எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர்

November 15, 2019 தண்டோரா குழு

ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாபர் மசூதி தீர்ப்பை மறுபரிசீலனை செய்து சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்கவேண்டும் தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியது தீர்ப்பே தவிர நீதியல்ல என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் பேட்டியளித்துள்ளார்.

அயோத்தி – பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் அரசியல் அழுத்தம் இருப்பதாக கூறி கோவையில் பத்திரிகையாளர் மன்றத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்தான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதரீதியான துன்புறுத்தல் தான் தற்கொலைக்கு துண்டியுள்ளது. மரணத்திற்கு காரணமான அனைவரும் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நவம்பர் 18 ம் தேதி உயர்மின் கோபுரத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் சாலை மறியல் நடக்குவுள்ள கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆதரவு தெரிவிப்பார்கள்.மேலும் பாபர் மசூதி தீர்ப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றில் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் படிக்க