• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புத்தகங்கள் உங்களை உங்களுக்கு அடையாளம் காட்டும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

November 15, 2019 தண்டோரா குழு

கோவை புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் ஒடிசி புத்தக கடை செயல்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் 15ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியின் தொடக்கவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், சாகித்ய விருது பெற்ற பிரபல எழுதாளர் ராமகிஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர்,

“அனைவரும் வாசிப்புத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் புத்தகங்கள்தான் ஒரு மனிதனுக்கு அவனுடைய மகிழ்ச்சியையும், வருத்தத்தையும் அடையாளம் காட்டுபவை. புத்தகம் உங்களை உங்களுக்கே அடையாளம் காட்ட வல்லவை. ஒரு மனிதனின் துயரத்தை சமூகத்துக்கு எடுத்துக் காட்ட உருவானவர்களே எழுத்தாளர்கள். எழுத்தாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்குத் புத்தக வாசிப்புத்திறனை வளர்த்துக்கொண்டு அனைவரும் ஏதாவது ஒரு புத்தகத்தையாவது வாங்கி படிக்க வேண்டும்.” என்றார்.

இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக பிரபல எழுத்தாளர்களான ராஜேஷ்குமார், நாஞ்சில்நாடன், கோபாலகிருஷ்ணன், சோம.வள்ளியப்பன், முகில் மற்றும் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணியளவில் வாசகர்களை சந்திக்கின்றனர். இந்த கண்காட்சியில் தமிழ் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க