• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாத்திமா லத்தீப்பின் தாயார் தமிழ் மண்ணின் மீது வைத்த நம்பிக்கை தகர்ந்து விட்டது – மு.க.ஸ்டாலின் வேதனை

November 14, 2019 தண்டோரா குழு

பாத்திமா லத்தீப்பின் தாயார் தமிழ் மண்ணின் மீது வைத்த நம்பிக்கை தகர்ந்து விட்டது என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முக.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,

சென்னை ஐஐடி மாணவி பாத்தீமா லத்தீப் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது. கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கை தவிர்த்து, அனைவரையும் சம உரிமையுடன் நடத்த வேண்டும்.சமமான உயர்கல்வியுடன் அனைவரையும் நடத்தும் போக்கு ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்களில் மேம்பட ஆவன செய்ய வேண்டும். மாணவி பாத்திமா லத்தீப் மரண வழக்கை நியாயமான, நேர்மையான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். மாணவி தற்கொலை குறித்த வழக்கின் விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும். சென்னை ஐஐடியில் இருந்து இத்தகைய சர்ச்சை எழுவது புதிது அல்ல. மாணவி பாத்திமா லத்தீப்பின் பெற்றோரின் கூற்று, தமிழ் மண் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க