• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அயோத்தி வழக்கின் தீர்ப்பை விமர்ச்சித்து பேசிய திருமுருகன் காந்தியை கைது செய்ய கோரி மனு

November 12, 2019 தண்டோரா குழு

அயோத்தி வழக்கின் தீர்ப்பை விமர்ச்சித்து பேசிய திருமுருகன் காந்தியை கைது செய்ய கோரி சக்தி சேனா அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
50க்கும் மேற்பட்ட சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாக கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில்,

1992ம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்நிலையில், பாபர் மசூதியின் வரலாறு முதல் அது குறித்த பல்லாண்டுகால வழக்கின் தீர்ப்பை கடந்த 9ஆம் தேதி உச்சநீதிமன்றம் ராமர் கோவிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பை வழங்கியது. இதனை தொடர்ந்து பல்வேறுஅரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்த நிலையில் மே17 என்ற இயக்கத்தை சார்ந்த திருமுருகன் காந்தி இந்து மற்றும் முஸ்லிம்களிடயே கலவரத்தை தூண்டும் விதமாக இத்தீர்ப்பு இந்துக்களின் வெற்றி அல்ல வன்முறையர்களின் வெற்றி என்று விமர்சித்து பேசி உள்ளார். மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க