• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாள் வீச்சு போட்டிகளில் சாதனை படைத்து வரும் மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு மாவட்ட ஆட்சியர் உதவி

November 11, 2019

வாள் வீச்சு போட்டிகளில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் இ ராசாமணி 30 ஆயிரம் மதிப்புள்ள வாள் வீச்சு உபகரணங்களை அவருக்கு வழங்கினார்.

வாள் வீச்சு போட்டிகளில் கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை தீபிகா என்பவர் தொடர் சாதனை படைத்து வருகிறார்.சமீபத்தில் சென்னையில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்று அனைவரது பாராட்டையும் அவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தான் தொடர்ந்து இவ்விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிய மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து தீபிகா ராணிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் 30 ஆயிரம் மதிப்புள்ள வாள் வீச்சு உபகரணங்களை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அவருக்கு வழங்கினார். இவ்வுதவியானது அவரது சாதனை தாகத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் படிக்க