• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளைஞரை தமிழ் முறைப்படி திருமணம் செய்த கொங்குநாட்டு பெண்

November 11, 2019

ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளைஞரை கோவையை சேர்ந்த பெண் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

கோவை துடியலூர் அருகிலுள்ள பன்னிமடையை சேர்ந்த சுப்பிரமணியம் – கலாவதி ஆகியோரின் மகள் வித்யபிரபா (வயது 28). கோவையில் கணிப்பொறியியல் படித்துவிட்டு ஜெர்மனி நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அதைப்போல் ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஷீல்டஸ் என்பவரின் மகன் மைக்கேல் ஷீல்டஸ் (வயது 29). ஜெர்மனி நாட்டில் இருவரும் ஓரே கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்குமிடையே அறிமுகமாகி நட்பு மலர்ந்தது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் தங்கள் வீட்டாரிடம் பேசி சம்மதத்தைப் பெற்றனர். மைக்கேல் ஷீல்டஸ் மற்றும் வித்யபிரபா ஆகியோருக்கு கோவை வெள்ளகிணர் பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மைக்கேல் ஷீல்டஸ் குடும்பத்தினர் வரமுடியாததால். வித்யபிரபாவின் தாய் மாமா கனகராஜ் பார்வதி ஆகியோர் மனமகனின் பெற்றோராக இருந்து சடங்குகளைச் செய்தனர். பாதபூஜை செய்தல், மலர் வாழ்த்துதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன. இந்த திருமணத்திற்கு ஜெர்மனியில் இருந்து மைக்கேல் ஷீல்டஸ் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கலந்து கொண்டனர். அவர்களும் திருமண விழாவின் போது தமிழ்க் கலாச்சார உடை அணிந்து விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர்.

மேலும் படிக்க